Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மின்சார ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!?

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரண்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்  இடையே இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.எனவே ரயில் பயணிகள் அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |