செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் அவரிடம் இருப்பது கோஷ்டி. நாங்கள் ஒரு கட்சி. கட்சிக்கும், கோஷ்டிக்கும் வித்தியாசம் உள்ளது. கட்சி என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அண்ணா பிறந்தநாள் கூட்டம் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம் அவருக்கு பலம் இருந்தால் கூட்டத்தை நடத்த சொல்லுங்க. அவரிடம் கூட்டம் நடத்த ஆளில்லை. தொண்டர்களும் இல்லை.
நீங்க கர்ணன் படம் பார்த்தீர்களா? அதில் கர்ணன், ”கர்ணன் எஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் தினகரனடா”… தினகரனை நம்பி மோசம் போனார். ஒற்றைத் தலைமையை ஏற்றிருந்தால் அவருக்கு மரியாதை இருந்திருக்கும். இப்போது யாருமே இல்லை. மரியாதை இல்லை. அவரு சமூக வலைத்தளத்தையும், டிவிட்டரை நம்பி தான் உள்ளார் என்று கூறியுள்ளார்.