Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. வாகனம் நிறுத்த இடங்களில் ஏற்படும் விதி மீறல்களை கண்டறிய காவல்துறையினர், மாநகராட்சியை சேர்ந்த குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனம் நிறுத்தம் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான கட்டணத்தை வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என்றும் வாகன நிறுத்த இடங்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியின் என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் இருந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஐந்து ரூபாயும்,வணிக வளாக பகுதியான தியாகராய நகர் மற்றும் பாண்டிபஜார் வாகன நிறுத்தங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |