Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி….? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….!!!!

காவல்துறையினருக்கு வெள்ளம் மீட்பு பயிற்சியானது தகுந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ரப்பர் படத்தின் மூலமாக காவல்துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தமிழ்நாடு பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

இதில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பயிற்சியில் ரப்பர் படகை கையாளுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, மரம் அறுக்கும் இயந்திரங்களை கையாளுவது எப்படி? என்பது குறித்து பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |