Categories
தேசிய செய்திகள்

8 சிவிங்கிகள் வந்துட்டு…. ஆனா 16 கோடி வேலை எப்ப வரும்?…. ராகுல் கேள்வி….!!!!

நமீபியா நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிகளை தன் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திரமோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்துவிட்டார்.  கடந்த 1948-ல் இந்தியாவின் கடைசி சிவிங்கி இறந்தது. இதையடுத்து நாட்டில் சிவிங்கி இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டுமாக சிவிங்கி இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிகள் இந்தியா வந்தடைந்தது.

இவ்வாறு கண்டம்விட்டு கண்டம் தாண்டி நமீபியாவிலிருந்து கூட 8 சிவிங்கிகள் இந்தியா வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் 8 வருடங்களில் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டிய 16 கோடி வேலைவாய்ப்புகள் எப்போது வரும் என்று இந்திய பிரதமரிடம் டுவிட்டரில் ராகுல் காந்தி கேட்டிருக்கிறார். இதற்கிடையில் ராகுல் பதவிக்கு வந்தால் வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது மோடியின் பிரபலமான தேர்தல் கோஷம் ஆகும்.

Categories

Tech |