செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு, 21 வருடம் உடன் இருந்து பணியாற்றியவன் நான். மாண்புமிகு அம்மா அவர்களே என்னைப் பற்றி பல நேரங்களில், பல கூட்டங்களில், அவர்களின் உள்ளங்களில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய வாக்குதான் வேத வாக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லுகின்ற வாக்கு என்ன வாக்கு ? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இன்னைக்கு நாங்கள் எடுத்திருக்கின்ற நிலை, அனைத்திந்திய திராவிட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதயம் தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள் தான் அதனுடைய தலைமை பீடத்தில் யார் அமர வேண்டும் ? என்ற உரிமையை இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதற்குத்தான் நாங்கள் இன்னைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.