நாய்கள் தொல்லை தொடர்பாக கேரளா முதல் மந்திரி பினராய விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளாவில் நாய்களை கொன்று குவிப்பதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே சமயம் நாய்களை விஷம் வைத்தும் அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதும் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெரு ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசியயெறியும் மாமிசம் உட்பட கழிவுகளை உன்னத்தான் அவைகள் கூடுகின்றது. அதேசமயம் அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் தொல்லை செய்து வருகின்றது. கழிவுகளை பொதுவான பாதுகாப்பான இடத்தில் சேமித்தால் இந்த பிரச்சனை ஏற்படாது. மேலும் நாய் கடிக்கான மருந்துகள் தரமற்றது என புகார்கள் எழுந்துள்ளது இதற்கு மத்திய சுகாதாரத் துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Categories