இந்திய சந்தையில் Royal Enfield நிறுவனம் அறிமுகம் செய்த hunter 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் புதிய Royal Enfield hunter 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1, 50,000 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1, 69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Royal Enfield hunter 350 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. Royal Enfield நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய hunter 350 மோட்டார்சைக்கிள் 349 சிசி, ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் சிங்கில் சிலிண்டர் OHC பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் எஞ்சின் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துவதோடு, 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது. ஆகஸ்ட் 2022 மாதத்தில் மட்டும் Royal Enfield hunter 350 மாடல் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த மாத விற்பனையில் அசத்திய கிளாசிக் 350 மாடலை விட Royal Enfield hunter 350 வெறும் 796 யூனிட்கள் தான் பின்தங்கியுள்ளது.