Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எத்தனை முறை சொல்லிருப்போம் கேட்டியா….? சிறை கைதிக்கு புதிய வழக்கு இனாம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

விழுப்புரம் அருகே சாராயம் விற்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதி மேல் கூடுதலாக மற்றொரு வழக்கை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியையடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட பின்பு இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில்,

இவர் மீது கோட்டகுப்பம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சாராயம் கடத்தியதாகவும், விற்றதாகவும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து எத்தனை முறை கண்டித்தபின்பும் தொடர்ந்து சாராயம் விற்கும் குற்றத்தில் ஈடுபட்ட இவர் குறித்த வழக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவரை சாராய தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் இதற்கான நகல் சிறையில் இருக்கும் அவருக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் அவரது தண்டனை காலம் மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |