ஈரோடு அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் இந்து இவர் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. அவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருமே சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 10 தினங்களுக்கு முன் பொலவகாளிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில் பாட்டியை பார்ப்பதற்காக இந்து வந்திருக்கின்றார்.
நேற்று மதியம் வீட்டிலிருந்து தனது அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்ட இந்து இரவாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்தை சுற்றி முழுமையாக டேப் வைத்து ஒட்டி விட்டு ஹீலியம் வாயுவை அந்த கவருக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் இந்துவின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக இளம் பெண் ஹீலியம் வாயு அடங்கிய சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருமணமாகி நான்கு மாதங்களிலேயே தற்கொலை முடிவு எடுத்திருப்பதால் இதற்கான காரணம் பற்றி கோபி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.