Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர் அடித்து கொலை…. 2 நாட்கள் சடலத்துடன் தங்கியிருந்த ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நண்பரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு ஜெ.ஜெ நகரில் ஆட்டோ ஓட்டுநரான முருகன்(42) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குடிபோதையில் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு அருகே வந்த முருகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டேன். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(42) என்பவர் முருகனின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.

நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முருகன் சுரேஷின் தலையில் சுத்தியலால் பலமாக அடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து குடிபோதையில் சுரேஷின் பிணத்துடன் 2 நாட்களாக முருகன் இருந்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் சுரேஷின் உடலை அகற்ற முடியாததால் நீதிமன்றத்தில் முருகன் சரணடைய வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முருகனை கைது செய்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |