Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்க அம்மா சாக கூடாது….. எல்லாத்தையும் எடுத்துக்கோங்க…. மகன்… மகள்களின் பாச செயலுக்கு….. குவியும் பாராட்டு….!!

வேலூர் அருகே இறந்த தாயின் உடல் உறுப்புகளை அவரது மகன் மகள்கள் தானம் செய்ய முன்வந்தது அங்குள்ளோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த மைசூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜமுனா. கணவனை இழந்த இவரது மகள் மற்றும் இரண்டு மகன்களை படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. மகன்களில் ஒருவன் மின்சாரவாரிய  ஊழியராகவும் மற்றொருவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து உள்ளார்.

இந்நிலையில் ஜமுனா சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மூளைச் சாவடைந்தார்.

இதை கேட்ட அவரது மகள் மற்றும் மகன்கள் கதறி அழுததுடன் சிறிது நேரத்தில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் இதயம் சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சிறப்பு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது தாய் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. இறந்த பின்பும் அவரது உடல் உறுப்புகள் இயங்குவதன் மூலம்  அவர் இங்கு உயிர் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |