பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அன்னதாய் சாவியை வைத்து சொல்லும் இடத்தை அறிந்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அன்னதாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பணம் மற்றும் நகையை திருடியது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அவரிடமிருந்த பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.