Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத நேரத்தில்…. அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாலசுப்பிரமணி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பாலசுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |