Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சைடு வாங்க முயற்சி….. தூக்கி வீசிய லாரி….. கல்லூரி வாலிபர் மரணம்….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சந்தோஷ். இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறைவிட்டதன் காரணமாக சொந்த ஊரான அமிர்தாபுரத்திற்கு வந்த சந்தோஷ் தனது பள்ளிக்கூட நண்பனை பார்ப்பதற்காக ஆர்கேபேட்டைக்கு  தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சமத்துவபுரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல நினைத்து அவசரமாக சைடு வாங்கியுள்ளார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இவர் பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்க  பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய திருத்தணியை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் ரவி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனை கண்டு தந்தை பெருமாள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |