சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 718 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளை சமீப வருடங்களாக கொரோனா புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், முதன் முதலில் சீன நாட்டின் வூஹான் நகரில் தான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்நிலையில் அந்நாட்டில் சமீப மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது.
எனவே, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 986 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, நேற்று ஒரே நாளில், சுமார் 718 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.