வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுக நாயனார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகநயினார் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகநயினார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.