இலங்கையைச் சேர்ந்த பாடகி யோஹானி பாடிய “மணிகே மாகே ஹிதே” எனும் பாடல் சென்ற வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த பாடல் இப்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, நோரா படேஹி நடித்துள்ள “தேங்க் காட்” என்ற படத்தில், “மணிகே மாகே ஹிதே” பாடல் இடம்பெற்றுள்ளது.
மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இப்பாடலையும், யோஹானியே பாடியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தனிஷ்க் பக்ஷி மற்றும் சாமத் சங்கீத் இசை அமைத்துள்ளனர். யோஹானியுடன் சேர்ந்து ஜுபின் நவ்டியால் மற்றும் சூர்யா ரகுநாதன் போன்றோர் இந்த பாடலை பாடியுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை யூடியூபில் வெளியாகிய இந்த பாடலின் வீடியோ இப்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.