Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேரன்…. பேத்தி எடுக்கும் வயதில் கள்ளகாதலா….? கணவன் ஆவேசம்….. 28 வயது இளைஞர் வெட்டி கொலை…. தூத்துக்குடி அருகே பரபரப்பு….!!

தூத்துக்குடி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும், பக்கத்து வீட்டு இளைஞனையும் மேள கலைஞர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியையடுத்த புங்கவர்ணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். வயது 50 இவர் மேள  கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். வயது 45. இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகனைத் தவிர மற்ற அனைவரும் திருமணமாகி தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடைசி மகன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சண்முகமும் அவ்வப்போது மேள  தொழிலுக்காக வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்ட எதிர் வீட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி என்னும் 28 வயதான இளைஞர் ஒருவர் மாரியம்மாள் உடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சண்முகம் மாரியம்மாளை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தாததால் இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று நினைத்து நேற்று முன்தினம் இரவு அதிக அளவில் குடித்தது போல் நாடகமாடி உள்ளார். பின் வீட்டின் வராண்டாவில் படுத்து உறங்குவது போல் அவர் நடிக்க ராமமூர்த்தி ஒரு மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்து மாரியம்மாள் உடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதையடுத்து மெதுவாக உள்ளே சென்ற சண்முகம்  அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத அவர் ராமமூர்த்தி தலையை துண்டாக வெட்டி வீசியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க மறுநாள் காலை பசுவந்தனை காவல் நிலையத்தில் சரணடைந்தார் சண்முகம். இதையடுத்து காவல்துறையினர் சண்மூகத்தின் வீட்டிற்கு சென்று இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |