தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே நடத்தி இருந்தார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. அதிலும் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று யூட்யூபில் சாதனை படைத்துள்ளது. அதில், இடம்பெற்ற விஜயின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது. அதன்படி அரபிக் குத்து பாடல் யூட்யூபில் 27 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. அதே நேரத்தில் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பு வெளியிடப்பட்ட லிரிக்ஸ் வீடியோ 47 கோடி பார்வையாளர்களே கடந்து சாதனை படைத்தது.