சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி அருகே 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷ்(19) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.