Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சி ஒளிபரப்ப முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலவு குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கின்றது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படை எடுத்து இருக்கின்றார்கள். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதை உடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே ராணியின் உடல் நலடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்த சூழலில் பிரிட்டன் நாடு முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திரையரங்குகள் மட்டும் இல்லாமல் பூங்கா சதுரங்கள் உள்ளிட்ட போது இடங்களில் சடங்கு நிகழ்ச்சிகான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெஸ்ட் மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதி சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர் வலங்களும் பிபிசி ஐடிபி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்படும் என கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 1997இல் இளவரசி டயானாவின் இறுதி சடங்குகள் 2012ல் லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளைவிட கூட்டம் அதிகமாக இருக்கும் எனவும் இறுதி சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறை அறிவித்திருக்கிறது.

Categories

Tech |