Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். பருவ காலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் பெற்றோர் யாரும் பீதி அடைய வேண்டாம். முக கவசம், தனிமனித இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்பாட்டை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |