உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நானும் ஐஸ்வர்யாராயும் நட்பாக பழகக் கூடாது என்று இயக்குனர் மணிரத்தினம் கண்டிஷன் போட்டார் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்ட படப்பிடிப்பிலேயே நாங்கள் இருவரும் நட்பாகி விட்டோம்.ஆனால் நாங்கள் நட்பாக இருந்தால் காட்சிகள் சரியாக வராது என்று மணிரத்தினம் கூறினார் என்று திரிசா பேசினார்.அது மட்டுமல்லாமல் வாயில் நுழையாத வசனங்களை பேசுவதற்கு மணிரத்தினம் தான் உதவி செய்தார் எனவும் த்ரிஷா கூறியுள்ளார்.