Categories
தேசிய செய்திகள்

வாரத்திற்கு 250 விமான சேவைகள்?…. ஆகாசா ஏா் போடும் பிளான்….. சூப்பர் தகவல்….!!!!

புதியதாக துவங்கப்பட்டுள்ள இந்திய விமானம் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250க்கு அதிகமான விமானசேவைகளை அளிக்க திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருகிற அக்டோபா் மாத்தின் 2வது வாரத்துக்குள் 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் அதிகமான விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அக்டோபா் 7ம் தேதி முதல் பெங்களூருக்கும், அகமதாபாத்துக்கும் இடையில் விமான சேவையைத் துவங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விரைவில் 5-வதாக ஒரு விமானம் நிறுவனத்தின் பணியில் இணைக்கப்பட இருக்கிறது. அந்த விமானம் சோ்க்கப்படுவது வாரத்துக்கு 250-க்கும் அதிகமான விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்கும் இலக்கை அடையவதற்கு வழிவகை செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பாக சென்னை -பெங்களூரு நகரங்களுக்கு இடையில் விமானப் போக்குவரத்து சேவையை நிறுவனம் சென்ற வாரம் முதல் துவங்கியது.

அந்நகரங்களுக்கு இடையில் தினசரி 2 விமானங்கள் இயக்கப்படும் என நிறுவனம் தெரிவித்தது. இதுதவிர்த்து சென்னை மற்றும் கொச்சிக்கு இடையில் வருகிற 26ம் தேதி முதல் விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுதும் எங்களது விமானப்போக்குவரத்து சேவைகளை படிப்படியாகவும், அதே சமயத்தில் மிக விரைவாகவும் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்த புது சேவைகள் அறிமுகப்படுத்தபடுவதாக நிறுவனம் தெரிவித்தது.

Categories

Tech |