Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போக்குவரத்து அலுவலகம் குறித்த பெருமளவிலான பணிகளை ஆன்லைன் வாயிலாக செய்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, வாகனப்பதிவு பரிமாற்றம் ஆகிய அனைத்து முக்கிய வசதிகளும் இச்சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களிடம் கார் (அல்லது) எதாவது வாகனம் இருந்தால் இச்செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமைப் பரிமாற்றம் ஆகிய 58 முக்கியப் பணிகளுக்கான வசதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆன்லைனில் வழங்குகிறது. இச்சேவைகள் அனைத்தையும் வீட்டில் அமர்ந்தபடியே செய்யலாம்.

அதாவது, மொத்தம் 58 சேவைகளை ஆதார் சரிபார்ப்பு உதவியுடன் வீட்டில் இருந்தபடியே செய்துக்கொள்ளலாம். அரசு அலுவலகத்துக்குச் போகாமல் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் இது போன்ற சேவைகளை வழங்குவது குடிமக்களின் மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தும் என சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் குறைவதால், பணியின் செயல் திறன் அதிகரிக்கும். ஆதார் சரிபார்ப்பைப் பெறக்கூடிய ஆன்லைன் சேவைகளில் ஓட்டுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சேவைகளும் அடங்கும். இது தவிர்த்து சர்வதேச ஓட்டுநர் அனுமதி, நடத்துனர் உரிமத்தின் முகவரி மாற்றம், மோட்டார்வாகனத்தின் உரிமையை மாற்றுதல் ஆகிய பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம். இவற்றிற்கு தானாக முன் வந்து ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்த அறிவிப்பை செப்டம்பர் 16 ஆம் தேதி அமைச்சகம் வெளியிட்டது. ஆதார்எண் இல்லாத ஒருவர் வேறு சில அடையாளச் சான்றுகளைக் காட்டி நேரடியாக சேவைகளைப் பெறலாம். இதுதவிர உங்களது ஓட்டுநர் உரிமத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் ஆகும். இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதாரை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கலாம். இதன் காரணமாக பலவழிகளில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். மேலும் பல்வேறு வகையான மோசடிகளைத் தடுக்கலாம். UIDAIன் ஆதார் அடிப்படையிலான வழிகாட்டுதல்களின் படி, உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் போலி (அல்லது) போலியான நகலை உருவாக்குவது கடினம் ஆகும். ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைப்பதன் வாயிலாக நீங்கள் ஒரு புது DL ஐப் பெறலாம் (அல்லது) ஏற்கனவேயுள்ள உரிமத்தைப் புதுப்பிக்கலாம். அவ்வாறு  ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதால் மேலும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

Categories

Tech |