‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல், 6 நாட்களுக்கு முன், “மனசுல நிறைய கவலை இருக்கு, யாரு கிட்டயாவது மனசுவிட்டு பேசணும்னு தோணுது. ஆனா கேக்குறதுக்கு தான் யாரும் இல்லை” என்றும் அவர் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.