மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இவற்றில் மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டிஏ-வுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு குறித்த கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் எனவும் டிஏ பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
DA உயர்வானது 4% அதிகரிக்கப்படும். இப்போது டிஏ உயர்வு 34 சதவீத ஆக உள்ளது. உயர்வுக்குப் பின் இது 38 சதவீதம் ஆக இருக்கும். மத்திய அரசானது வருடத்திற்கு இரண்டு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படிக்கான உயர்வை அறிவிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை என வருடத்திற்கு இரண்டு முறை இந்த உயர்வு நடைமுறைபடுத்தப்படும். ஜனவரி 2022-ல் 31% ஆக இருந்த அகவிலைப்படியானது, அப்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஏஐசிபிஐ என்ற அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின்படி இந்த உயர்வு செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஜூலை-டிசம்பர் 2022 காலக் கட்டத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பால் 52 லட்சம் ஊழியர்களும், 63 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். 7-வது சம்பள கமிஷனில் (7வது CPC) குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் ரூபாய்.18000 என்பதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என தெரிந்துக்கொள்ளலாம்.
# ஊழியரின் குறைந்தபட்சம் அடிப்படைசம்பளமானது- மாதம் ரூபாய் 18,000
# இப்போதைய டிஏ (34%) – மாதம் ரூபாய்.6120
# புது டிஏ (38%) – மாதம் ரூபாய்.6840
# புது டிஏ உடன் தொகை அதிகரிக்கப்பட்டது -மாதம் ரூபாய்.6840- 6120 = 720
# ஆண்டு சம்பளஉயர்வு – 720X12= ரூபாய் 8640
# ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் – மாதம் ரூபாய். 56900
# தற்போதைய டிஏ(34%) – ரூபாய் 19346
# புது டிஏ (38%) – ரூபாய். 21622
# புது டிஏ உடன் அதிகரித்ததொகை – மாதத்துக்கு ரூபய் 21622-19346 = 2276
# ஆண்டு சம்பள உயர்வு – 2276 X12= ரூ 27,312
செப்டம்பரில் மத்தியஅரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன்படி, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பரிசாக கிடைக்கப்போகிறது.