நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ஒரு நபர் இந்திய நிலப்பரப்பில் நடைபெறும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் இந்த கைபர் கணவாய் தானே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “உண்மைதான். கைபர் கணவாய் பாகிஸ்தானுக்கு போய்விட்டது. ஆனால் பாக். போக வேண்டியதெல்லாம் இங்கே இருந்து விஷம் விதைக்கிறதுகள். வெறுப்பை வைத்து பிழைக்கும் ஓநாய்கள். நீங்கள் யாரும் தமிழ்க்குடி கிடையாது. ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது” என்று பதிலளித்தார்.