வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபருக்கு வலைவீச்சு
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் இவர் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியக சாலையில் நடந்து சென்ற பொழுது வாலிபர் ஒருவர் வந்து வழிமறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட அப்துல்ரகுமான் செல்போனை தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டார்.
இதனால் கோபம் கொண்ட கொள்ளையன் அப்துல்ரகுமானின் முகத்தில் கத்தியை வைத்து குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அப்துல் ரகுமான். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.