தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அப்படின்னு கெஜ்ரிவால் சொல்லி இருக்காரு. திரு. செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்களே..
300 யூனிட் இலவசமாக எப்படி கரண்ட் கொடுக்க முடியும் என்பதை பஸ்ட் நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் நீங்கள் கெஜ்ரிவாலை கூப்பிட்டு, இங்கே நிகழ்ச்சிகளை நடத்துங்கள். தமிழ்நாடு முழுக்க மின்கட்டண உயர்வு கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சனை, ஒரு பக்கம் கேட்டா மின் கட்டண உயர்வு. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டை இல்லை, இல்லை என்று சொல்கிறார்.
எல்லாமே பொய்யான வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்த உடனே நீட்டை ஒழித்து விடுவோம், ஆட்சிக்கு வந்த உடனே டாஸ்மார்க்கை ஒழித்து விடுவோம், ஆட்சிக்கு வந்த உடனே தாய்க்குலமே உங்கள் எல்லாருக்கும் 1000 ரூபாய் கொடுப்போம். அது மட்டும் இல்லை, மின் கட்டணம் உயராது, விலைவாசி உயராது, எல்லாம் இலவசம், மானவர்களுக்கு இலவசம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என எண்ணில் அடங்காத வாக்குறுதிகளை வீசி, இன்னைக்கு ஒரு பொய்யான ஆட்சியை அமைத்திருக்கிறது என தெரிவித்தார்.