செய்தியாளர்களை சந்திது பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக சேர்ந்து செயல்படுகிற அளவுக்கு அவருக்கு அறிவு வேலை செய்யவில்லை. அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்களோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக பழகி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ வாழவில்லை. கட்சியை வளர்ப்பதற்கும் அவர் வாழவில்லை. அவர் கட்சியை அழிப்பதற்கு என்றே ஒரு பிறவியை எடுத்து வந்திருக்கிறார்.
அதனால் அந்த ஏழரை நாட்டு சனி இந்த ஒரு மாதத்திற்கு இருக்கும் பாத்துக்கோங்க. அறிவோடு திரும்பி வந்து கட்சியோடு சேர்ந்து வேலை செய்யுங்கன்னு சொல்றோம் திருந்தவே முடியாதுன்னு சொன்னா என்ன செய்வாங்க. ஒன்னு வீட்டுக்கு அடங்கணும். இல்லனா ஊருக்கு அடங்கனும் இரண்டுக்கும் அடங்காதவர்கள் யாரோ ஒருவரிடம் மாட்டி அடங்குவார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகாத மனப்பக்குவம் இல்லாதவர். நீங்க அவர் பேசும்போது பாருங்க அவரு சிரிச்ச முகத்த. அவரு சிரிக்கிறது பாத்தா குழந்தை கூட தூங்காது என்று பேசியுள்ளார்.