கேரளாவில் 30 வயது ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ள சம்பவம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் லாட்டரி சீட் விற்பனை நடைபெற்று வருகின்றது. கேரளா அரசாங்கம் இதற்கு தடை விதித்தல் கிடையாது, தொடர்ந்து அங்கு லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும். அதுவும் விசேஷ நாட்களில் சிறப்பு ஆஃபர்கள் எல்லாம் இருக்கும். இந்த லாட்டரி டிக்கெட் மூலமாக சாதாரண மக்கள் கூட கோடீஸ்வரராக மாறி உள்ளனர். இது தொடர்பான நிறைய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தற்போது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த அனூப் ஓணம் பம்பர் லாட்டரி வாங்கி இருக்கிறார். கேரள நிதியமைச்சர் நேற்று குழுக்களில் அனூப் நம்பரை தேர்ந்தெடுத்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது “மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை” என்று அவர் கூறினார். அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் விலை ₹500. இதனால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.