வார விடுமுறை வந்தாலே என்ன செய்யலாம் அதை எப்படி கழிக்கலாம் என்பதை யோசித்தே சனி ஞாயிறு விடுமுறைகள் முடிந்து விடுகிறது. ஆனால் விர்ஜினியா மக்கள் போரடித்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? நேரடியாக விமான நிலையம் சென்று விமானத்தை கயிறு கட்டி இழுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். ஆமாம் சுமார் 82,000 கிலோ எடை இருக்கின்ற விமானத்தில் கயிறை கட்டி தர தர என இழுப்பது தான் போட்டியாகும். மக்களும் மாங்கு மாங்கு என்று விமானத்தை தங்களின் முழு பலத்தையும் வெளிப்படுத்தி இழுத்து வருகின்றார்கள். ஆனால் இந்த போட்டி ஒரு நல்ல காரியத்திற்காக நிதி திரட்ட நடத்தப்படுகின்றது. மேலும் இதில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும் இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories