தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது அதைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது ஒவ்வொரு நடிகர்களின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் போதும் அதை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை பிரபலமாக்கியதில் கூல் சுரேஷ்-க்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
இதன் காரணமாக தற்போது கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில், தனக்கு உதவி செய்த ஒரு நடிகர் குறித்து கூல் சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது தனக்கு தற்போது வரை சந்தானம் மட்டும்தான் உதவி செய்து வருவதாகவும், என்னை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத ஒரே நடிகர் சந்தானம் மட்டும்தான் என்று உருக்கமாக கூறியுள்ளார். மேலும் நடிகர் கூல் சுரேஸுக்கு தற்போது பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.