விஜய் பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு ரசிகர் கேட்டதற்கு நடிகை கீர்த்தி செட்டி சொன்ன பதில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி தற்போது பல மொழி திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து இவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டதற்கு கீர்த்தி செட்டி இன்ஸ்பையரிங் சூப்பர்ஸ்டார் என பதில் அளித்துள்ளார். இந்த பதில் விஜய் ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் உள்ள அந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டிக்கு வாய்ப்பு கொடுக்குமாறு விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.
Inspiring superstar 🔥
— KrithiShetty (@IamKrithiShetty) September 15, 2022