Categories
உலக செய்திகள்

அடிச்சது பாரு ஜாக்பாட் …. கூகுளிடமிருந்து தற்செயலாக வந்த பணம்…. ஒரு பைசா கூட எடுக்காமல் நேர்மையாக நடந்த நபரா….?

கூகுள் நிறுவனம் தவறுதலாக ஒருவரது வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான பணத்தை அனுப்பியும், அந்த நபர் ஆச்சரியப்படும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவின் மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் Sam Curry, கூகுளிலிருந்து எதிர்பாராத தொகையாக 250,000 அமெரிக்க டாலர் பணம் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி) தனது கணக்கில் வந்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். Sam புதன்கிழமை அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “கூகுள் எனக்கு $249,999 ஐ தோராயமாக அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் சப்போர்ட் டிக்கெட்டில் எதுவும் கேட்கவில்லை. நான் கூகுளைத் தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா..? (நீங்கள் அதைத் திரும்பப் பெற விரும்பவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்., பரவாயில்லை…)” என்று வேடிக்கையாக ஒரு பதிவை செய்தார்.

இந்த விடயம் ஒருவழியாக கூகுள் நிறுவனத்தாய் அடைய, இது குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “மனிதப் பிழையின் விளைவாக எங்கள் குழு சமீபத்தில் தவறான நபருக்கு பணம் செலுத்தியது. பணத்தை பெற்றவர் விரைவாக எங்களுக்கு தகவல் தெரிவித்ததை நாங்கள் பாராட்டுகின்றோம், அதைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகின்றோம்” என்று அவர் கூறினார். 3 வாரங்களுக்கு மேலாக சாம் வங்கிக் கணக்கில் பணம் இருந்தது, ஆனால் அவர் எந்தத் தொகையையும் செலவழிக்காமல் கூகுள் நிறுவனம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தார். அதே போன்று கூகுள் தற்செயலாக பணத்தை செலுத்தியது என்ற அவரது யூகம் சரியாக இருந்தது.

கூகுள் நிறுவனம் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார். Sam Curry சில சமயங்களில் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தங்கள் மென்பொருளில் பிழைகளைக் (bugs) கண்டறிய உதவுவதாகவும் கூறினார். அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கூகுள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவே பணத்தை அப்படியே வைத்திருந்தேன். நான் அதை எளிமையாக பயன்படுத்த எனக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது. கூகுள் எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அந்த பணத்தை வேறொரு கணக்கில் மாற்ற வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |