கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார்.
கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி. இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொள்ளாச்சி காவல்துறையினர் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.