ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கூடலூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தேவர்சோலை காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாணவியை தேடி கண்டுபிடித்து உள்ளனர்.
கண்டுபிடித்த மாணவியிடம் போலீசார் நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்ட பொழுது மாணவி வீட்டின் அருகே இருக்கும் உஸ்மான் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் எனவே அச்சம் கொண்டு மாயமான தாகவும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கூடலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உஸ்மானை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.