Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…19) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மம நாயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

காங்கயம் மின்வாரியம் கோட்டத்துக்குட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் முருகன் காட்டு வலசு, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, சகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, பட்டிவீரன்பட்டி, எம். வாடிப்பட்டி, அழகாபுரி, சேவுகம்பட்டி, தும்மலபட்டி சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, அய்யங்கோட்டை. ரெட்டியார்சத்திரம் மாங்கரை, அம்மாபட்டி, ராஜா புதுார், பொட்டிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, ஸ்ரீராமபுரம், நீலமலைக்கோட்டை, பலக்கனுாத்து, ரெட்டியார்சத்திரம், கதிரையன்குளம், வெயிலடிச்சான்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என். சுப்பையாபுரம் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் கரிசல்பட்டி தோட்டிலோவன்பட்டி பெத்துரெட்டிபட்டி இ. டி. ரெட்டியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிவகாசி கோட்டப்பொறியாளர் பாபநாசம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |