Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்று தேர்வு எழுது” மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஹரிஷ் நேற்று காலை பள்ளிக்கு தேர்வு எழுத சொல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ஹரிஷ் வீட்டின் மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஹரிசை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தவர்கள் ஹரிஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |