Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமை…. பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு….!!!!

தமிழகத்தில்  அரசு பள்ளி மாணவர்களின் உடல் நல குறைபாடு குறித்து பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் உட்பட 36 வகைநோய்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு மாணவரையும் முழுமையாக ஆய்வு செய்ய 30 நிமிடங்கள் ஆகும்.

இதனால் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியவில்லை.காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே மருத்துவ ஆய்வு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என அரசை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |