Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்… காவல்துறையின் கருத்துக்களை ஏற்க மறுத்த மாணவிகள்… 2 வார்டன்கள் பணி நீக்கம்…!!!!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. இதனை அடுத்து நள்ளிரவை தாண்டிய பின் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் தகவல் தொழில்நுட்ப சட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும் அந்த வாலிபர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி பல்கலைக்கழகத்திற்குள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவர் நிருபர்களிடம் பேசியபோது, பெற்றோரின் கவலை எனக்கு புரிகிறது போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவி ஏன் வீடியோ எடுத்தார் என்பது ஆழ்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பஞ்சாப் மாநில முதல் மந்திரி பகவந்த் மான் இந்த விவகாரம் பற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெண்கள் விடுதி வார்டன் ராஜ்விந்தர் கவுனை சஸ்பென்ஸ் செய்தது. அதனை தொடர்ந்து பல்கலைக்கழகமும் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரல் வீடியோவில் காணப்பட்ட விடுதி வார்டன் இந்த விஷயத்தை பற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கிய போது அவர் மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் மாணவியின் தொலைபேசியில் நான்கு வீடியோக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் அந்தப் பெண்ணின் காதலனுக்கு அனுப்பியவை என மொஹாலியின் உயர் போலீஸ் அதிகாரி நவ்ரித் சிங் விர்க் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுவது போல பல்கலைக்கழகத்தில் தற்கொலை முயற்சி எதுவும் நடைபெறவில்லை விடுதி குளியலறையில் மற்ற பெண்களின் ஆபாச வீடியோக்களை அந்த மாணவி எடுத்ததற்கான ஆதாரம் இல்லை என காவல்துறையின் கருத்துக்களை சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மாணவி சிம்லாவில் வசித்து வருகிறார். அவர் அவரையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரது காதலன் ஒரு டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார் பேக்கரி ஒன்றில் பணிபுரியும் இரண்டாவது நபரும் இதில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Categories

Tech |