Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… “நடுவானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்”… 3 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!!

அமெரிக்காவில் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங் மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில்  மூன்று பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன என்பதை பற்றி அறிய அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கி இருக்கிறது.

Categories

Tech |