Categories
தேசிய செய்திகள்

“NO BAG DAY” மாணவர்களுக்கு இனி ஜாலிதான்….. பள்ளிகளில் விரைவில் தொடங்கும் சூப்பர் திட்டம்…..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை. அனுபவக் கற்றல் மற்றும் நடைமுறைக்கு அந்த தினம் ஒதுக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் மாணவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துதல் ஆகும். நோ பேக் டே மூலம் மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார்கள். இந்தத் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார். அதன்பின் நோ பேக் டே குறித்து கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் துறை அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய் கூறியதாவது, மாநில கல்வி அமைச்சரை சந்தித்து விரிவான திட்டத்தை சமர்பிக்க முடிவு செய்துள்ளோம்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சமூக காலமாகவே தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடுகின்றனர். இது பெருமைக்குறியது. அதன்பின் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறிய வயதிலேயே மாணவர்களின் விளையாட்டு திறமையை அறிய முடியும். அதற்கு ஏற்ப மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர்களை தயார் படுத்துவதற்கான பயிற்சிகளை கொடுக்க முடியும் என்றார்.

Categories

Tech |