Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்..!!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமியின் பதவிக்காலம் 21ஆம் தேதி உடன் நிறைவடைவதால் டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றதால் துரைசாமி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். செப்டம்பர் 22ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை டி ராஜா கவனிப்பார்..

Categories

Tech |