Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக உட்கட்சி தேர்தல்….. முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உக்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி  பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கானது இன்று நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கேசி பழனிசாமி நீக்கப்பட்டதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே.சி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கேசி பழனிசாமியின் தரப்பு வழக்கறிஞர், தாம் நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் தமது நீக்கம் செல்லாது என கே.சி தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்..

பின்னர் கேள்வி எழுப்பிய நீதிபதி சி.வி கார்த்திகேயன் எவ்வாறு இந்த வழக்கு எவ்வாறு விசாரணைக்கு உகந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலவையில் இருக்கிறதா? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கேசி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறினார்..

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே சி பழனிச்சாமி மனுசாக்கல் செய்ய அவருக்கு தகுதி இல்லை. எனவே அடிப்படை உறுப்பினரே இல்லாத ஒருவர் உட்கட்சி விவகாரத்தில் எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்த தகுதி இல்லை என்பதால் அவருடைய மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்..

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, அதாவது உட்கட்சி தேர்தலை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் இருக்கக்கூடிய வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களே விசாரித்து முடிவெடுக்கலாம் எனவும் சி.வி கார்த்திகேயன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |