Categories
இயற்கை மருத்துவம்

எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பிரண்டை… மருத்துவ குணங்கள்! 

  • பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அ திகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. 
  • இது தவிர பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.
  • பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். 
  • பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுகிறது. 
  • பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் சீராக இருக்கும். 
  • பிரண்டையில் அன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் எடை குறைப்பு தன்மை அதிகம் உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இது உடல் கொழுப்பை குறைத்து ஒட்டுமொத்த கொழுப்பு தன்மையை மேம்படுத்துகிறது. 
  • பிரண்டையின் இலைகளை துவையலாக அரைத்து அல்லது காய்கறிகளுடன் சமைத்து உட்கொள்வதால் செரிமானம் சீராகிறது என்று பாட்டி வைத்தியம் கூறுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில், பிரண்டையின் தண்டுகளை தூளாக்கி அதனுடன் சம அளவு இஞ்சி தூள் சேர்த்து தயாரிக்கும் மருந்து பசியின்மைக்கு சிறந்த தீர்வைத் தருகிறது.
  •  பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும். 2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். உடல் வலிமை பெறும்.

Categories

Tech |