Categories
அரசியல்

திமுக தலைமையே நியாயமா….? மேலிடத்திற்கு சரமாரி கேள்வி…. திடீர் போஸ்டரால் பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகாவில் பாளையம் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவராக பழனிச்சாமி என்பவர் இருக்கிறார். இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் இருந்து திமுக நிர்வாகிகளை மதிக்காமல் இருப்பதாகவும், உறவினர்களுடன் சேர்ந்தே சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. இவர்களை வைத்து பழனிச்சாமி அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதன்பிறகு பழனிச்சாமிக்கு திமுக கட்சியில் உறுப்பினர் அட்டை கூட இல்லை என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமியின் பண பலத்தால் தான் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவருக்கு பதவியை வழங்கியதாகவும் திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேரூர் கழக செயலாளர் பதவி கதிரேசன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது திமுக நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கும், உழைத்தவர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை என கூறுகின்றனர். கடந்த 20 வருடங்களாக பேரூர் கழகச் செயலாளராக இருக்கும் சம்பத் அவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு கதிரேசன் வெற்றி பெற்றார். இப்படி கட்சிக்கு எதிராக செயல்பட்டு சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கதிரேசனுக்கு பதவி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், எரியோடு மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் திமுக தலைமையே நியாயமா என்றும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த பதவியும் பலனும் இல்லையா என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் திமுக கட்சியின் தொண்டர்களே மேலிடத்தை தாக்கி போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |