Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ரூட் இப்படி போகுதா ? DMKவில் C.M ஆசை ”திருமா பேச்சு” கொளுத்தி போட்ட எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கோரிக்கை. ஹிந்துக்களை ஆ.ராசா ”வேசி மகன்” என பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஏனென்றால் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற 90% பேர் ஹிந்துக்கள் என்று…. அப்போ ஆ.ராசா என்ன சொல்கிறார் ? திமுகவில் இருக்கின்ற 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்கிறார்.

இதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆ. ராசாவே உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்க வேண்டும். ஏன் இதைத் தொடர்ந்து பேசுகிறார் ? ஆ.ராசா எதிர்பார்த்தது நானே முதலமைச்சராகலாம் என்கின்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. நான் ஏன் வரக்கூடாது ? அவர் இதை திருமாவளவனை வைத்து பேச வைத்தார்.

ஏனென்றால் திருமாவளவன் ஆ. ராசாவை முதலமைச்சர் ஆக்கினால் என்ன ? என்று பேசி இருக்கிறார் ஏற்கனவே… திமுகவிற்கு தலைவராக ஆகலாமா ? என பேசினார் முடியவில்லை. திமுகவுக்கு பொருளாளர் ஆகலாமா என  எதிர்பார்த்தார் ? அதுவும் கிடைக்கவில்லை, அதை துரைமுருகனிடம் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார்,  எழுதிக் கொடுத்தால்  பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும்,  இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால்,

திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் ஸ்டாலின் பாவம், அவருக்கு திறமை இல்லை. எழுதிக் கொடுக்கவில்லை என்றால் அவருக்கு பேச தெரியாது, என்பதெல்லாம் தகுதி இல்லை என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |